சிவாஜி நகர் தொடருந்து நிலையம்
சிவாஜி நகர் தொடருந்து நிலையம் புனேயின் சிவாஜி நகர் பகுதியில் உள்ளது. இங்கு புனேயின் புற நகர் ரயில்கள் நின்று செல்கின்றன. இது இரண்டு நடைமேடைகளைக் கொண்டது. இங்கு மும்பையில் இருந்து புனே நகருக்கு வரும் ரயில்கள் நின்று செல்கின்றன. இந்த நிலையத்திற்கு அருகில் புனே நகரின் அமர்வு நீதிமன்றம், புனே மாநகராட்சி அலுவலகம், பொறியியல் கல்லூரி ஆகியன உள்ளன. இந்த ரயில் நிலையத்தின் பின்புறத்தில் பழைய மும்பை - புனே சாலை உள்ளது. இங்கிருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் புனே ரயில் நிலையம் உள்ளது.
Read article